திருத்தணியில் பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி


திருத்தணியில் பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி
x

திருத்தணியில் வருவாய் துறையின் சார்பில் இயற்கை இடர்பாடுகள் பேரிடர் காலங்களில் விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

திருவள்ளூர்

திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. ஹஸ்ரத்பேகம் தொடங்கி வைத்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) வீரராகவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் இடையே கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகளை அருகே உள்ள ஏரி, குளம் மற்றும் கிணறுகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஆபத்து காலங்களில் அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சை குறித்து செயல்முறை விளக்கம் காட்டினர். கட்டிட இடிப்பாடுகள் மற்றும் தீவிபத்து ஏற்படும் போது அதில் சிக்கி தவிக்கும் மக்களை எவ்வாறு பாதுகாப்புடன் மீட்பது குறித்து வீரர்கள் ஒத்திகை நடத்தி காட்டினர்.

இதில் திருத்தணி தாசில்தார் விஜயராணி, திருத்தணி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், திருத்தணி வருவாய் ஆய்வாளர் கமல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story