மேல்நிைல வகுப்புகளுக்கும் ஆங்கில வழி கல்வி


மேல்நிைல வகுப்புகளுக்கும் ஆங்கில வழி கல்வி
x

மேல்நிைல வகுப்புகளுக்கும் ஆங்கில வழி கல்வி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை ஊக்குவிக்க அரசு மாதிரி (மாடல்) பள்ளியாக மாற்ற கருத்துகேட்பு நடைபெற்றது. அதில் தேவையான இடவசதியும், கட்டிட வசதியும் உள்ள செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாடல் பள்ளியாக விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

மாடல் பள்ளி

சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் 7 ஏக்கர் பரப்பில் விசாலமாக அமைந்துள்ள செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 2018-ம் ஆண்டு மாடல் பள்ளியாக மாற்றியமைக்கப்பட்டது.

மாடல் பள்ளியாக மாற்றுவதற்கு முன்பு 700-க்கும் குறைவான மாணவ, மாணவிகள், படித்து வந்தனர். செவல்பட்டி அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியாக மாற்றப்பட்ட பிறகு மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது. தற்போது இந்த பள்ளியில் 860 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரை மாடல் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

13 கிராமங்கள்

செவல்பட்டி அரசு மாடல் பள்ளியில் குகன் பாறை, வரகனூர், அம்மையார்பட்டி, சக்கம்மாள்புரம், கொட்ட மடக்கிப்பட்டி, கீழாண்மறை நாடு, வெம்பக்கோட்டை, அலமேலுமங்கைபுரம், மூர்த்தி நாயக்கன்பட்டி, அன்னபூரணியாபுரம் இ. மீனாட்சிபுரம், சமத்துவபுரம், செவல்பட்டியை ஆகிய 13 கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இப்பகுதி அதிக அளவு செங்கல் சூளை மிகுந்த பகுதியாகும். விவசாய குடும்பங்கள் வசிக்கின்ற இப்பகுதியில் உள்ள மாணவர்கள் ஆங்கில வழியில் கல்வி பெற 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவேங்கடம் சென்று வந்தனர்.

ஆங்கில வழி கல்வி

இந்தநிலையில் செவல்பட்டி அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியாக மாற்றப்பட்ட பிறகு இந்த பள்ளியில் தான் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் தற்போது 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தமிழ் வழியில் தான் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. எனவே இதனையும் ஆங்கில வழி கல்வியாக மாற்றி அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story