தூத்துக்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டத்தில் ரூ.1.96 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள திட்டம்


தூத்துக்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டத்தில்  ரூ.1.96 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள திட்டம்
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

தூத்துக்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டத்தில் ரூ.1.96 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

தூத்துக்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி யூனியன் தலைவர் வசுமதிஅம்பாசங்கர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆஸ்கர், யூனியன் ஆணையாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் மேலாளர் மாசானம் வரவேற்றார். கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்பு கூட்டத்தில், தூத்துக்குடி யூனியன் தலைவர் பேசுகையில், கூட்டத்தில் ரூ.1.96 கோடி செலவில் அல்லிகுளம், குமாரகிரி, கூட்டுடன்காடு, வர்த்தக ரெட்டிபட்டி, தளவாய்புரம், மாப்பிள்ளையூரணி, மறவன்மடம், சேர்வைகரன்மடம் ஆகிய கிராம பஞ்சாயத்து பகுதியில் தார்சாலை, பேவர் பிளாக் சாலை, வடிகால் அமைத்தல், கழிவுநீர் கால்வாய்கள், சிறுபாலம், தடுப்பு சுவர்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு உள்ளது' என்றார்.

கூட்டத்தில், யூனியன் கவுன்சிலர்கள் அந்தோணி, தனுஷ்பாலன், முத்துக்குமார், சுதர்சன்,தொம்மைசேவியர், ஆனந்தி, முத்துமாலை, மரியசெல்வி, முத்துலட்சுமி, செல்வபாரதி, ஜெயகணபதி, நர்மதா, யூனியன் சத்துணவு மேலாளர் செல்வராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story