கந்தம்பாளையத்தில் குட்டையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தொடக்கம்


கந்தம்பாளையத்தில்   குட்டையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தொடக்கம்
x

கந்தம்பாளையத்தில் குட்டையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தொடக்கம்

நாமக்கல்

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சுமார் 1½ ஏக்கரில் மழைநீர் குட்டை உள்ளது. இந்த குட்டை பல ஆண்டுகளுக்கு முன்பு நல்லூர் ஊராட்சி சார்பில் தூர்வாரப்பட்டு, அகலப்படுத்தி பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில் குட்டையில் கழிவுநீர் மற்றும் கடைவீதியில் இருந்து குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. அவற்றில் தற்போது ஆகாயத்தாமரை செடிகள் சூழ்ந்து குட்டையை ஆக்கிரமிப்பு செய்துள்ளன.

இதற்கிடையே தொடர் மழை காரணமாக குட்டையில் தண்ணீர் நிரம்பியதால் அதன் அருகே உள்ள வாவி கிணற்றிலும் நீர் நிரம்பி ஆகாயத்தாமரை படர்ந்தது. இதனை தொடர்ந்து நல்லூர் ஊராட்சி சார்பில் குட்டை மற்றும் வாவி கிணற்றில் ஆகாயத்தாமரை, முட்செடிகளை அகற்றும் பணி நடந்தது. நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த பணியை நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பொன் விஜய ராகுல் தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் விஜயசாந்தி, ஊராட்சி செயலாளர் ராஜா, வார்டு உறுப்பினர் கவிதா ராஜா, ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story