ஓபிஎஸ் அதிமுகவே அல்ல- தனிக்கட்சி நடத்தி வருகிறார்- ஐகோர்ட்டில் எடப்பாடி தரப்பு அதிரடி


ஓபிஎஸ் அதிமுகவே அல்ல- தனிக்கட்சி நடத்தி வருகிறார்- ஐகோர்ட்டில் எடப்பாடி தரப்பு அதிரடி
x
தினத்தந்தி 22 March 2023 10:19 AM GMT (Updated: 22 March 2023 11:23 AM GMT)

ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதத்தை அடுத்து எடப்பாடி பழனசாமி தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது

சென்னை

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இந்த வழக்கின் பரபரப்பு வாதங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

ஓ.பி.எஸ். மற்றும் மனோஜ் பாண்டியன் தரப்பு வாதங்கள் முடிந்ததை அடுத்து, வைத்திலிங்கம் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது.

ஒற்றைத் தலைமை வேண்டும் என பெரும்பான்மையினர் விரும்பினாலும், அதை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்தான் முடிவெடுக்க முடியும்.

எக்காரணம் கொண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக இருக்க முடியாது.

பதவிகள் காலாவதியாகி விட்டதாகவும் ஒருவர் கூறமுடியாது.

பல்வேறு பொறுப்புகளை வகித்த நிலையில், விளக்கம் கேட்காமல் என்னை நீக்கியுள்ளனர்"

"ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பொதுச்செயலாளருக்கான அதிகாரம் வழங்கப்பட்டது" என வாதிடப்பட்டது.

வைத்திலிங்கம் தரப்பு வாதம் நிறைவு பெற்றதை தொடர்ந்து ஜேசிடி பிரபாகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் வாதங்களை முன்வைத்த்தார்.

இதை தொடர்ந்து எடப்பாடி பழனசாமி தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

'ஓபிஎஸ் தனக்கென தனிக்கட்சியை நடத்தி வருகிறார்; பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது"

எங்களை நீக்கி தமக்கான நிர்வாகிகளை நியமித்து உள்ளார்.

அதிமுகவுக்கு அவ்வப்போது சிலர் உரிமை கோரித்தான் வருகின்றனர்; ஆனால் தேர்தல் ஆணையத்தில், மக்கள் மன்றத்தில் அதனை நிரூபிக்க வேண்டும்.

அதிமுக கட்டமைப்பின் முக்கிய அம்சமே பொதுக்குழுதான் அதிகாரம் மிக்கது என்பதாகும். பொதுக்குழு தீர்மானங்களே மிக முக்கியமானதும் இறுதியானதும் ஆகும்.

பொதுக்குழு முடிவுகளே இறுதியானது: முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும்.

இரட்டைத் தலைமையால் அரசியல் ரீதியாக முடிவெடுப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் ஒற்றை தலைமையில் செயல்படலாம் என முடிவெடுக்கப்பட்டது.

கட்சியில் நடவடிக்கை எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது; பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறியுள்ளது

எனவே, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குறைகூற முடியாது; கட்சியினரின் குரலாக பொதுச்செயலாளர் தேர்தல் நடப்பதால், அதை தடுக்க முடியாது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கூடாது.

வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் தான் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு. ஆகையால் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது.

பெரும்பான்மையானவர்கள் முடிவு செய்தால், அது தான் கட்சியின் விதிகள்.

52 ஆண்டு கால அதிமுகவில் 47 ஆண்டுகள், பொதுச்செயலாளர் பதவி தான் இருந்துள்ளது.5 ஆண்டுகள் மட்டுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருந்துள்ளன"

மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பால் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான பாதை தெளிவாகியுள்ளது.


Next Story