முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்ட பொதுமக்கள்


முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்ட பொதுமக்கள்
x

மகாளய அமாவாசையைெயாட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.

விருதுநகர்

திருச்சுழி,

மகாளய அமாவாசையைெயாட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.

மகாளய அமாவாசை

விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள திருச்சுழி குண்டாற்றில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகாலை முதலே வந்தனர். பின்னர் அங்கு நீராடி இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

பின்னர் திருச்சுழி திருமேனிநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு விளக்கேற்றினர். மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சுழி திருமேனிநாத சுவாமி கோவில் மற்றும் குண்டாற்று பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சிவகாசி

சிவகாசி சிவன் கோவில், திருத்தங்கல் கருநல்லிசுவாமி கோவில், பஸ் நிலையத்தில் உள்ள துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோவில், சாட்சியாபுரத்தில் உள்ள உமாமகேஸ் வரி கோவில் உள்ளிட்ட கோவில்களில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சாத்தூர்

சாத்தூர் வைப்பாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். சாத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 50-க் கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பேர் கலந்து கொண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


Next Story