நெல்லிக்குப்பம் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


நெல்லிக்குப்பம் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:45 PM GMT)

நெல்லிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார்.

கடலூர்


நெல்லிக்குப்பம்,

பண்ருட்டி திருவதிகை பகுதியை சேர்ந்தவர் முத்தமிழ் (வயது 33). இவருக்கும் பாரதிகிருஷ்ணா என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பணியாக இருந்த பாரதி கிருஷ்ணாவிற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் முத்தமிழ் நேற்று மாலை மேல்பட்டாம்பாக்கம் சோதனை சாவடி இருந்து பண்ருட்டி நோக்கி மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், முத்தமிழ் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முத்தமிழ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். எதிரே வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிய மாளிகைமேட்டை சேர்ந்த பிரசாத் என்பவர் படுகாயமடைந்தார்.

போலீசார் விசாரணை

விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஓராண்டில் சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story