வேணுகோபால கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேக விழா


வேணுகோபால கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேக விழா
x

திருப்பூர் பாளையக்காடு வடக்கு ராஜாமாதா நகரில் வேணுகோபால கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று யாக பூஜையுடன் தொடங்கியது.

திருப்பூர்

திருப்பூர் பாளையக்காடு வடக்கு ராஜாமாதா நகரில் வேணுகோபால கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று யாக பூஜையுடன் தொடங்கியது.

யாக பூஜை

திருப்பூர் பாளையக்காடு வடக்கு ராஜாமாதா நகரில் ேவணு கோபால கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தும்பிக்கையாழ்வார், அஞ்சநேயர், கருடாழ்வார் ஆகிய சக்திகளுடன் வேணு கோபால கிருஷ்ணர் சன்னதி உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று காலை புனித நீர் எடுக்க செல்லும் நிகழ்வு நடந்தது. இதையடுத்து மாலையில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் மிராசு அர்ச்சகர் முராரி பட்டர் தலைமையில் முதல்கால யாக பூஜை நடந்தது. இதில் மங்கள வாத்யம், மஹா சங்கல்பம், ஆசார்ய வந்தனம், அனுக்ஞை, வாஸ்து ேஹாமம், விஷ்வக்ேஸந ஆராதனம், உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் இந்த யாக பூஜை நடந்தது. இதில் யாதவ குல விழா குழுவினர் மற்றும் ராஜாமாதா நகர் பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகம்

விழவையொட்டி இன்று காலை 7½ மணிக்கு நடக்கும் தீர்த்தகுடம், முளைப்பாரி ஊர்வலம் பாளையக்காடு சக்தி மாரியம்மன் கோவிலில் தொடங்கி வேணுகோபால கிருஷ்ணர் கோவிலை சென்றடைகிறது. இதையடுத்து மதியம் 2½ மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து மூர்த்திகள் விமான கலச அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை(புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது காலை 4 மணி முதல் பூஜைகள் தொடங்கி மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், குடங்கள் புறப்படுதல் நடைபெறுகிறது. பின்னர் 7 மணி முதல் 7½ மணிக்குள் விமானம் மற்றும் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து மஹா தீபாராதனையும், காலை 9 மணி முதல் அன்னதானமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை யாதவ குல விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story