சேவுகப் பெருமாள் அய்யனார் கோவிலில் அன்னதான விழா


சேவுகப் பெருமாள் அய்யனார் கோவிலில் அன்னதான விழா
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

சேவுகப் பெருமாள் அய்யனார் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி அன்னதான விழாநடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் உள்ள சேவுகப் பெருமாள் அய்யனார் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி அன்னதான விழா நடைபெற்றது. முன்னதாக மல்லாக்கோட்டை ஊராட்சி தலைவர் விஜய ராதாகிருஷ்ணன், தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சார்பில் சேஅன்னதான விழா நடைபெற்றது.வுகப்பெருமாள் அய்யனார் சகோதரர் என்றழைக்கப்படும் சூரக்குடி கோவில்பட்டி செகுட்டு அய்யனார் கோவில் சன்னதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதேபோல சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் பூரண புட்கலா தேவியர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து கோவில் பின்புறம் அமைக்கப்பட்ட பிரமாண்ட பந்தலில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த அன்னத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு தலை வாழை இலை போட்டு 5 வகை காய்கறிகளுடன் உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், ஜமாத் தலைவர் ராஜா முகமது, சத்தியசீலன், புசலியம்மாள் மருத்துவமனை பொது மருத்துவர் அருள்மணி நாகராஜன், இளம்பருதி கண்ணன், கருணாநிதி, பாரிவள்ளல் பள்ளி மேலாளர் சரவணன், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சதீஷ், பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் கண்ணையா, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஊடகப்பிரிவு முத்து பிரகாஷ், வடக்கு ஒன்றிய தலைவர் இளையராஜா, செந்தில் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story