வனிச்சம்பட்டி மகாசக்தி மாரியம்மன் கோவில்கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்


வனிச்சம்பட்டி மகாசக்தி மாரியம்மன் கோவில்கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்
x

வனிச்சம்பட்டி மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

சேலம்

தாரமங்கலம்,

தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு வடக்கு கிராமம், வனிச்சம்பட்டியில் மகாசக்தி மாரியம்மன், விநாயகர், பாலமுருகன், ஓங்காளியம்மன், வெள்ளை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) காலை 6 மணியளவில் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் துட்டம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியப்பன் தலைமையில் நடைபெற்றது. தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவரும், அ.தி.மு.க. பிரமுகருமான சின்னகண்ணு முன்னிலை வகித்தார். பாப்பாம்பாடி சென்றாய பெருமாள் கோவிலில் இருந்து, குதிரை, பசு முன்பு செல்ல தாரை, தப்பட்டை, அதிர்வேட்டு முழங்க பக்தர்கள் காவடி, கரகம், தீர்த்தக்குடம் எடுத்து புறப்பட்டனர். பாப்பாம்பாடியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் துட்டம்பட்டி பைபாஸ் வழியாக 3 கிலோ மீட்டர் தூரம் சென்று வனிச்சம்பட்டியில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவில் திடலை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஆண், பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டுதங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story