கால்பந்து ஜாம்பவான் பீலே மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!


கால்பந்து ஜாம்பவான் பீலே மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
x

பிரேசி கால்பந்து ஜாம்பவான் பீலே மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரேசிலியா,

சர்வதேச போட்டியில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கும் பிரேசில் ஜாம்பவான் பீலே மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பீலேவின் உண்மையான பெயர் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ என்பதாகும். கடந்தாண்டு அவருக்கு பெருங்குடலில் சிறிய கட்டி (புற்றுநோய் ) இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.அவர் சமீப காலமாக மிகவும் பலவீனமான உடல்நலத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பீலேவுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது மகள் கெல்லி நஸிமென்டோ , இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'பெருங்குடல் பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும், டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் குணமடைவார் என குறிப்பிட்டுள்ளார்.'


Next Story