நட்புறவு கால்பந்து போட்டி: மெஸ்சி அணி வெற்றி


நட்புறவு கால்பந்து போட்டி: மெஸ்சி அணி வெற்றி
x

மெஸ்சியும், ரொனால்டோவும் களத்தில் நேருக்கு நேர் சந்தித்ததால் ரசிகர்களின் ஆவல் எகிறியிருந்தது.

ரியாத்,

லயோனல் மெஸ்சி, எம்பாப்பே, நெய்மார் உள்ளிட்டோர் அடங்கிய பி.எஸ்.ஜி. கிளப்புக்கும், முன்னணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கொண்ட ரியாத்தின் ஆல்-ஸ்டார் லெவன் அணிக்கும் இடையே நட்புறவு கால்பந்து போட்டி சவுதிஅரேபியாவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு இரு அணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு பிறகு மெஸ்சியும், ரொனால்டோவும் களத்தில் நேருக்கு நேர் சந்தித்ததால் ரசிகர்களின் ஆவல் எகிறியிருந்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பி.எஸ்.ஜி. அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஆல்- ஸ்டாரை தோற்கடித்தது. ரொனால்டோ 2 கோலும், மெஸ்சி ஒரு கோலும் தங்கள் பங்குக்கு அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினர்.


Next Story