ஒலிம்பிக்கிற்கு முன் சில பிரிவுகளில் முன்னேற்றம் அடைய வேண்டும் - இந்திய ஆக்கி அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்


ஒலிம்பிக்கிற்கு முன் சில பிரிவுகளில் முன்னேற்றம் அடைய வேண்டும் - இந்திய ஆக்கி அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்
x

image courtesy:PTI

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி ஒயிட்வாஷ் ஆனது.

புதுடெல்லி,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆண்கள் ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு முன் இந்திய அணி சில பிரிவுகளில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று முன்னாள் வீரரான ருபிந்தர் பால் சிங் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ஆஸ்திரேலிய தொடரில் முதல் போட்டியில் 1-5 என்ற கணக்கில் இந்திய அணி தோற்றது. இதன் பின் அடுத்த போட்டிகளில் பல்வேறு கோல் வாய்ப்புகளை வீணடித்து தோற்றாலும், ஒட்டுமொத்தமாக வீரர்கள் செயல்பாடு நம்பிக்கை தரும் வகையில் அமைந்தது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன் சில பிரிவுகளில் நாம் முன்னேற்றம் அடைய வேண்டும்.

இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்த முறையில் சிறப்பான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். பந்துகளை சக வீரர்களுக்கு 'பாஸ்' செய்வதில் புதிய திட்டங்களை பயன்படுத்த வேண்டும். விரைவாக 'பாஸ்' செய்வது, வீரர்கள் தலைக்கு மேலாக பந்தை துாக்கி அடித்து கொண்டு செல்வது போன்றவை அணிக்கு கைகொடுக்கும்" என்று கூறினார்.


Next Story