உலகக்கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா...!


உலகக்கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா...!
x

Image Courtesy: @TheHockeyIndia

ஹாக்கி உலகக்கோப்பையின் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஸ்பெயினை வீழ்த்தியது.

புவனேஸ்வர்,

15-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், ரூர்கேலா ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா- கொரியா அணிகள் மோதின. இதில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் கொரியா 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.

ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் நேரடியாகவும், ஸ்பெயின், நியூசிலாந்து, ஜெர்மனி, கொரியா அணிகள் 2-வது சுற்று மூலம் கால் இறுதிக்கும் தகுதி பெற்றன. கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய முதலாவது காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஸ்பெயின் அணிகள் மோதின.

ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. அந்த அணி 8-0 என்ற கணக்கில் பிரான்சையும், 9-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இருந்தது. அர்ஜென்டினாவுடன் 3-3 என்ற கணக்கில் 'டிரா' செய்தது.

அதே சமயம் ஸ்பெயின் அணி 'லீக்' சுற்றில் 0-2 என்ற கணக்கில் இந்தியாவிடமும், 0-4 என்ற கணக்கில் இங்கிலாந்திடமும் தோற்று இருந்தது. வேல்சை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 2-வது சுற்றில் மலேசியாவை தோற்கடித்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தனர். ஆனால் முதலாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்த 2வது பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2 கோலும், ஆஸ்திரேலியா 1 கோலும் அடித்தன. இதனாக் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 3வது பாதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தனர். 3வது பாதி ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 கோலும், ஸ்பெயின் 3 கோலும் அடித்திருந்தன. தொடர்ந்த 4வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் ஆட்டத்தை 4-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.


Next Story