கடைசி போட்டியில் தோல்வி: கண்ணீருடன் விடை பெற்றார் ரோஜர் பெடரர்


கடைசி போட்டியில் தோல்வி: கண்ணீருடன் விடை பெற்றார் ரோஜர் பெடரர்
x

image courtesy: Laver Cup twitter

தினத்தந்தி 24 Sep 2022 1:16 AM GMT (Updated: 24 Sep 2022 2:49 AM GMT)

டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வியடைந்த ரோஜர் பெடரர் கண்ணீருடன் விடை பெற்றார்.

லண்டன்,

சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்தார்.

அதன்படி லண்டனில் நேற்று தொடங்கிய லேவர் கோப்பை தொடரில் தனது கடைசி ஆட்டத்தை பெடரர் ஆடினார். இதில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோதின. ஐரோப்பிய அணியில் இடம்பெற்றுள்ள ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ - ஜாக் சாக் இணையுடன் மோதினார்.

இந்த போட்டியில் ரோஜர் பெடரர்- ரபேல் நடால் இணை 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் டியாபோ - ஜாக்சாக் இணையிடம் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வியடைந்த ரோஜர் பெடரர் கண்ணீருடன் விடை பெற்றார்.

ரோஜர் பெடரர் கூறும்போது, "இது ஒரு அற்புதமான நாள், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வருத்தமாக இல்லை. இங்கே இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது, கடைசியாக எல்லாவற்றையும் செய்து மகிழ்ந்தேன்" என்று கூறினார்.


Next Story