சென்னையில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
x
Daily Thanthi 2024-11-30 12:51:50.0
t-max-icont-min-icon

சென்னையில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம்

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் சில விரைவு ரெயில்கள் இன்று கடற்கரை ரெயில்நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன. அதன் விபரம்;

* சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில் (நள்ளிரவு 12.30)

* சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் (இரவு 11.55)

* சென்ட்ரல் -திருவனந்தபுரம் ரயில் (இரவு 8 )

* சென்ட்ரல் - பெங்களூரு மெயில் (இரவு 11.30)

* சென்ட்ரல் - கோவை அதிவிரைவு ரயில் (இரவு 11)

* சென்ட்ரல் - கோவை சேரன் எக்ஸ்பிரஸ் இரவு 10.30)

அதேபோல, சென்ட்ரலில் இருந்து பெங்களூரு, மங்களூரு, திருப்பதி மற்றும் மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருவள்ளூரில் இருந்து புறப்படும். சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆவடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Next Story