அக்டோபர் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்


October month rasipalan in tamil
x
தினத்தந்தி 30 Sep 2024 12:46 PM GMT (Updated: 30 Sep 2024 12:48 PM GMT)

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான அக்டோபர் மாத பலன்களை பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே..

நீங்கள் எந்த விசயத்திலும் நீங்கள் தந்தையானாலும் தாயானாலும் நேர்மையாக இருப்பவர். ஒருவருக்காகவும் பரிந்து பேசாதவர்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் செய்யும் வேலையில் கடமை உணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். அரசு உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் இடமாற்றம் கிடைத்துவிடும்.

சில்லரை வியாபாரிகளுக்கு அதாவது மளிகை கடை வியாபாரிகள் மற்றும் நடை பாதை வியாபாரிகளான காய்கறி வியாபாரிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.தங்கள் உழைப்பு உயர்வு தரும்.

குடும்பத் தலைவிகள் சிக்கன நடவடிக்கைமூலம் அதிக பணத்தை சேமிப்பீர்கள். தம்பதிகளிடையே நல்ல இணக்கம் உருவாகும். குடும்பத்தில் தங்கள் பிள்ளைகள் தங்களுக்கு மரியாதையுடன் பழகுவர்.

சினிமாத் துறையில் உள்ளவர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த சம்பளமும் மற்றும் கதாபாத்திரமும் கிடைத்து அதிகப் புகழினை பெறுவீர்கள். அதிகப் படவாய்ப்புகள் தங்களை தேடி வரும்.

மாணவர்கள் தங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற அடிக்கடி படித்துப் பார்ப்பதுடன் எழுதி பார்க்கவும் செய்வீர்கள். இதன் காரணமாக தாங்கள் அதிக மதிப்பெண்களை பெறுவீர்கள்.

பரிகாரம்

முருகருக்கு சிவப்பு மலரால் மாலையோ அல்லது பூச்சரமோ கொடுத்து கும்பிடவும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே..

உங்களுக்கு சமூக சேவையில் மனம் நாடும். மற்றவர்களின் தேவையை அறிந்து உதவுவதும் உங்கள் இயற்கையான குணம்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்கள், தாங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் தங்களுடைய திறமை வெளிப்பட்டு தங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், தாங்கள் மேலதிகாரிகளுக்கு பிடித்தமானவராக ஆவீர்கள்.

வியாபாரிகள் தங்களுடைய புதிய வியாபாரத்திற்காக சில முதலீடுகளை செய்து முடிப்பீர்கள். அதன் வாயிலாக தங்கள் வருமானம் உயர்வதற்கு வழி ஏற்படும்.

குடும்பத்தலைவிகள் தாங்கள் மதிப்புள்ள பொருட்களை வாங்குவதற்காக சேர்த்த பணத்தை வாங்குவீர்கள். குடும்பத்தில் தங்கள் மதிப்பு உயரும்

கலைஞர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்தப்படியே நல்ல வேடம் கிடைத்துவிடும். அதற்கு முன்பணமும் பெறுவீர்கள். மேலும், அதிக சம்பளமும் பெறுவீர்கள்.

பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கெல்லாம் விடுமுறையில் வேற்று மொழியைகற்க துவங்குவீர்கள்.

பரிகாரம்

பெருமாளை புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது. முடிந்தால் துளசி மாலையை கொடுப்பதும் நல்லது.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே..

பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதில் தெளிவு பெற்றவர் நீங்கள். தன்னை மதிப்பவர்களை மதிப்பவர் மாறாக நடந்து கொண்டால் அவர்களுக்குத்தான் பிரச்சினை ஆரம்பம்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிகளை விரைவில் முடிக்க சில திட்டங்களை தீட்டுவீர்கள். அதன் படி செய்து முடித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்திற்காக வெளிநாட்டில் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். மேலும், மற்றொரு வியாபாரத்தையும் துவங்குவீர்கள்.

குடும்பத் தலைவிகள் தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். மேலும், வீட்டினை அலங்கரிப்பதற்கு அலங்காரப் பொருட்களை வாங்குவீர்கள்.

கலைஞர்களுக்கு தாங்கள் அதிகமாக சம்பளம் கேட்பதற்கு தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். அதற்காக தாங்கள் இன்னுமொரு கலைகளையும் கற்றுக் கொள்வீர்கள்.

மாணவர்கள் தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று தாங்கள் நினைத்த துறையில் சேர வேண்டுமானால், கூடுமானவரை நன்கு படிப்பது நல்லது.

பரிகாரம்

அய்யனாருக்கு பொங்கல் வைப்பது நல்லது. அம்மனுக்கு முல்லை பூச்சரம் கொடுத்து கும்பிடவும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே..

நீங்கள் புது சிந்தனைகளையும் மாறுபட்ட புதுமையான கருத்தையும் சிறந்த தத்துவங்களையும் கூறுவீர்கள். அனைவரிடமும் நட்பு பாராட்டுவீர்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் கேட்ட இடத்தில் இடமாற்றம் கிடைத்துவிடும். சிறு தாமதமாகலாம் நிச்சயம் நடந்தேறும்.

வியாபாரிகள் வெளிநாட்டில் தங்கள் வியாபாரத்தை ஆரம்பிப்பர். ஏற்றுமதி செய்வதற்கு அதிகமான ஆர்டர்களை பெறுவர்.

குடும்ப தலைவிகள் உங்கள் குடும்ப முன்னேற்றத்திற்காக ஒரு முக்கியமான காரியத்தை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். அதனை செய்தும் முடிப்பீர்கள்.

கலைஞர்களுக்கு தங்கள் படப்பிடிப்புக்காக வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். அதில் தங்களுக்கு நல்ல கதாபாத்திரம் அமையும். அதன் மூலம் பலப்படங்கள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் பெறுவர். நினைவாற்றல் அதிகரிக்கும். வகுப்பில் முதல் வகுப்பில் தேருவீர்கள். தாங்கள் நினைத்த வேலையும் கிடைக்கும்.

பரிகாரம்

பெருமாளை புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.

கணித்தவர்:

திருமதி. N.ஞானரதம்

Cell 9381090389


Next Story