பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா முடிவடைந்தது
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா ராக் இசை கச்சேரி, ஆடல் பாடல் கொண்டாட்டங்களுடன் முடிவடைந்தது.
Live Updates
- 12 Aug 2024 1:36 AM IST
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் (இடது) மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கைகுலுக்கி கொள்கின்றனர்.
- 12 Aug 2024 1:35 AM IST
இந்தியாவின் தடகள வீரர்கள்
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில்இந்தியாவின் தடகள வீரர்கள்
- 12 Aug 2024 1:30 AM IST
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா; தேசியக் கொடியை ஏந்திச்சென்ற மனு பாக்கர், ஸ்ரீஜேஷ்
- 12 Aug 2024 1:28 AM IST
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த தொடரில் இந்தியாவுக்கு 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் கிடைத்தது.
கடந்த இரு வாரங்களாக விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்த ஒலிம்பிக் தொடரின் போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இந்நிலையில் ஒலிம்பிக் தொடரின் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா (40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம்) முதல் இடம் பிடித்துள்ளது.
சீனா 2வது இடமும் (40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம்), ஜப்பான் 3வது இடமும் (20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம்) பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இந்தியா (1 வெள்ளி, 5 வெண்கலம்) 71வது இடமும், பாகிஸ்தான் (1 தங்கம்) 62வது இடமும் பிடித்துள்ளன.
இதையடுத்து பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா இன்று நள்ளிரவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த நிறைவு விழாவில் இந்தியா தரப்பில் மனு பாக்கர், ஸ்ரீஜேஷ் ஆகியோர் தேசியக்கொடியை ஏந்திச்செல்கின்றனர்.
பிரான்ஸ் நாட்டின் நீச்சல் வீரர் லியோன் மார்சந்த் ஒலிம்பிக் சுடரை ஏந்தியபடி செல்கிறார் (படத்தில்).