தனது வீட்டிற்குள் மழைநீர் புகுந்து வருவதாக நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளத்தில் பதிவு


தனது வீட்டிற்குள் மழைநீர் புகுந்து வருவதாக நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளத்தில் பதிவு
x

எனக்கும் இங்குள்ள பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. நேற்று சென்னையில் தொய்வின்றி பெய்த மழையால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், சென்னையின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது.

இந்தநிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் தங்களுடைய பகுதியில், இருப்பவர்களுக்கு உதவி வேண்டும் என்றும், மக்கள் பாதுகாப்புடன் இருங்கள் எனவும் கூறியுள்ளார். வீட்டின் மேல் இருந்து வீடு தண்ணீருக்குள் மூழ்கி கொண்டு இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது "

காரப்பாக்கத்தில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் மட்டம் அதிகரித்து வருகிறது. மிகவும் மோசமாக தண்ணீர் உயர்ந்து வருகிறது. நான் உதவி கேட்டு இருக்கிறேன். மின்சாரம் இல்லை, வைபை இல்லை போன் சிக்னல் இல்லை ஒன்றுமில்லை. மொட்டை மாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே எனக்கு சில சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்குள்ள பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சென்னை முழுவதும் உள்ள மக்களுக்காக என்னால் உணர முடிகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" எனவும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.


Next Story