பாடகர்கள் அனைவருக்கும் திரையில் வாய்ப்பு - தமன் தந்த வாக்குறுதி


பாடகர்கள் அனைவருக்கும் திரையில் வாய்ப்பு - தமன் தந்த வாக்குறுதி
x
தினத்தந்தி 2 Dec 2023 5:20 AM GMT (Updated: 2 Dec 2023 5:35 AM GMT)

இறுதிக்கட்டத்தை எட்டும் பாடகர்களுக்கு திரையில் வாய்ப்புகளை தருவதாக இசையமைப்பாளர் தமன் வாக்குறுதி தந்துள்ளார்.

சென்னை,

தனியார் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை பாடல்களை பாடி பிரபலமடைந்து தமிழ்திரையிற்கு பாடகர்களாக மாறி வருகின்றனர்.

இதனிடையே, இந்த தனியார் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவராக பிரபல இசையமைப்பாளர் தமன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தை எட்டும் பாடகர்களுக்கு திரையில் வாய்ப்புகளை தருவதாக இசையமைப்பாளர் தமன் வாக்குறுதி தந்துள்ளார்.

அதன்படி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள அன்னபூரணி படத்தில் ஒரு பாடலையும் சூப்பர் சிங்கர் இறுதிக்கட்ட போட்டியாளர்கள் பாடியுள்ளனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திறமையாளர்கள் அனைவருக்கும் திரைப்பட பாடல் வாய்ப்பு தருவதாகவும் தமன் உறுதியளித்துள்ளார். இசையமைப்பாளர் தமனின் நெகிழ்ச்சியான செயல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.


Next Story