'தமிழில் எனக்கு பிடித்த நடிகர் இவர்தான்' - சூர்யகுமார் யாதவ்


Indian cricketer Surya Kumar Yadav picks his favorite Tamil actor
x

தமிழில் தனக்கு பிடித்த நடிகர் யார் என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

சென்னை,

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ். இவர் 20 ஓவர் உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். சமீபத்தில், உலககோப்பை தொடருக்காக இந்திய அணி அமெரிக்கா புறப்பட்டு சென்றது.

இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் தமிழில் தனக்கு பிடித்த நடிகர் யார் என்பது குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, நான் விஜய்யின் தீவிர ரசிகன். அவரது ஆக்சன் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். கல்லூரியில் படிக்கும்போது அவரது படங்களை தியேட்டரில் சென்று பார்பேன். இவ்வாறு கூறினார்.

மும்பையைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் தென்னிந்திய நடிகரான விஜய்யை புகழ்ந்து பேசுவது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்திய அணி வீரர்களுடன் விமானத்தில் சென்றபோது விஜய்யின் வாரிசு படத்தை சூர்யகுமார் பார்த்து அதில் வரும் ஒரு பாடலுக்கு வைப் ஆகி இருப்பார். இது குறித்தான வீடியோ வெளியாகி வைரலானது.


Next Story