கவர்ச்சியில் களமிறங்கிய கயல் ஆனந்தி


கவர்ச்சியில் களமிறங்கிய கயல் ஆனந்தி
x
தினத்தந்தி 2 Dec 2023 8:45 PM GMT (Updated: 2 Dec 2023 8:45 PM GMT)

கயல் படத்தில் நடிகை ஆனந்தியின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது.

சென்னை,

பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், ஆனந்தி. அந்த படத்தில் அவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. 'சண்டிவீரன்', 'திரிஷா இல்லைனா நயன்தாரா', 'விசாரணை', 'எனக்கு இன்னொரு பேரு இருக்கு', 'ரூபாய்', 'மன்னர் வகையறா', ராவண கோட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டில் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்தநிலையில் கயல் ஆனந்தி தனது கவர்ச்சி படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுவரை குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த அவர், தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி படங்கள் வைரலாக பரவி வருகின்றன. இதன்மூலம் கவர்ச்சியாக நடிக்கவும் தான் தயார் என்பதை கயல் ஆனந்தி சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்று திரையுலகினர் கூறுகின்றனர்.


Next Story