"அவன் என் லவ்வர்" ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 5 காதலிகள் ஒரு வாலிபருக்கு கட்டிபுரண்டு சண்டை -வீடியோ


அவன் என் லவ்வர் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 5 காதலிகள் ஒரு வாலிபருக்கு கட்டிபுரண்டு சண்டை -வீடியோ
x

5 பெண்களும் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்து இழுத்தும், ஆடைகளை பிடித்து இழுத்தும், கண்காட்சியிலேயே சண்டை போட்டுக்கொண்டனர்

பாட்னா

பஞ்சாபில் 4 பணக்கார பெண்கள் ஒரு வாலிபரை கடத்தி சென்ற பாலியல பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போன்ற இன்னொரு சம்பவம் பீகாரில் நேற்று நடந்துள்ளது. ஒரு வாலிபருக்காக 5 பெண்கள் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர் அதுவும் நடுரோட்டில். அதுகுறித்த வீடியோ வைரலாகி உள்ளது.

பீகார் மாநிலம் சோன்பூரில் இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியுடன் அங்கு நடந்த கண்காட்சி ஒன்றுக்கு சென்று உள்ளார். இதை அந்த இளைஞரின் இன்னொரு காதலி பார்த்துவிட்டார். அதுகுறித்து இளைஞரிடம் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டார். இதை அந்த இளைஞரின் இன்னொரு காதலி பார்த்துவிட்டார். அவரும் ஆவேசமாக வந்து சண்டை போட்டார்.

இப்படியே மொத்தம் 5 காதலிகள் ஒரே இடத்தில் எதிர்பாராமல் வந்துவிட்டனர். இவர்களுக்கு நடுவே அந்த காதலன் மாட்டிக்கொண்டார். 5 பேரையும் ஒரே சமயத்தில் இளைஞர் சாமர்த்தியமாக ஏமாற்றி வந்துள்ளார்.

5 பெண்களும் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்து இழுத்தும், ஆடைகளை பிடித்து இழுத்தும், கண்காட்சியிலேயே சண்டை போட்டுக்கொண்டனர். இவர்கள் சண்டைபோட்டதை அங்கிருந்த பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்ததுடன், சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்தனர்.

ஆனால், யாரையுமே தடுக்க ய முடியவில்லை.. "அவன் என் லவ்வர், அவன் என்னுடைய பாய்பிரண்ட்" என்று 5 பேரும் மாற்றி மாற்றி சரமாரியாக தாக்கி கொண்டார்கள்.

இந்த வீடியோவை பார்த்ததுமே பல நெட்டிசன்கள், வழக்கம்போல் தங்கள் பாணியில் கருத்துக்களை அள்ளி வீசி வருகிறார்கள்.

பஞ்சாப்பில் அவலம்...

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் இளைஞர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை நைட் தன்னுடைய டியூட்டியை முடித்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரில் 4 பெண்கள் இருந்துள்ளனர்.

அவர்கள் எல்லாருக்குமே 20 வயதுதான் இருக்கும்.திடீரென அந்த இளைஞனின் அருகில் காரை நிறுத்திவிட்டு, ஒரு துண்டு சீட்டை அந்த நபரிடம் நீட்டி, அதில் உள்ள முகவரி எங்கே என்று கேட்டுள்ளனர். இளைஞரும், துண்டு சீட்டை வாங்கி அந்த அட்ரஸை பார்த்தார். அதற்குள் அந்த பெண்கள் அவர் முகத்தில், ஸ்பிரே ஒன்றை அடித்துள்ளனர்.. அடுத்த செகண்டே இளைஞர் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை தங்களது காரில் கடத்திக் கொண்டு, கிளம்பிவிட்டனர்.

இருட்டு நேரம் என்பதால், ஒரு மறைவான இடத்தில் காரை நிறுத்தியுள்ளனர். அந்த இளைஞரின் கை, கால்களை கட்டிப்போட்டு, பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியுள்ளனர். 4 பேருமே போதையில் இருந்துள்ளனர்.

கையில் மதுபாட்டிலையும் அந்த பெண்கள் வைத்துக் கொண்டு, இளைஞரையும் குடிக்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர்..பிறகு 4 இளம்பெண்களும், அந்த இளைஞனை மாறி மாறி பலாத்காரம் செய்தார்களாம்.

நைட் டியூட்டி முடித்துவிட்டு நடந்து வந்த இளைஞனை கடத்திய அந்த பெண்கள், மறுநாள் விடிகாலை அதிகாலை 3 மணிக்குதான், இளைஞன் கை மற்றும் கண்களை கட்டி, ஏதோ ஒரு இடத்தில் இறக்கிவிட்டு போனார்களாம்.

கடைசியில், அந்த இளைஞன் நேராக போலீஸ் ஸ்டேஷன் போய், தனக்கு நடந்த அக்கிரமத்தையும், தன்னை பலாத்காரம் செய்ததையும் கண்ணீர் மல்க போலீசில் சொல்லி அழுதுள்ளார். இதைதவிர, ஊடகங்களுக்கும் பேட்டி தந்திருந்தார்.

அந்த பெண்கள் பணக்காரர்கள் போல தெரிந்தார்கள் என்றும் நன்றாக ஆங்கிலம் பேசினர் என்றும், தன்னிடம் 2 பெண்கள் பஞ்சாப் மொழியில் பேசினர் என்றும் கூறினார்.அவர்களின் அடையாளங்களை பெற்றுக் கொண்ட போலீசாரும், அந்த 4 பெண்களை தேடி கொண்டிருக்கிறார்கள்.Next Story