பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு 5-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை - தேஜஸ்வி தகவல்


பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு 5-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை - தேஜஸ்வி தகவல்
x

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு 5-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

குரானி,

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவரது மகளே தந்தைக்கு சிறுநீரகம் தானமாக வழங்க முன் வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் யாதவுக்கு வருகிற 5-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடப்பதாக அவரது மகனும், மாநில துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி, நேற்று குரானி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தார்.

அவர் கூறுகையில், 'லாலு ஜி இங்கு உங்களை சந்திக்க விரும்பினார். ஆனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருக்கிறார். அங்கு அவருக்கு 5-ந்தேதி அறுவை சிகிச்சை நடக்கிறது. ஆனாலும் பாஜகவை தோற்கடிக்க உங்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் அவர் கேட்டுக்கொண்டார்' என்று கூறினார்.

தனது உடல் நலக்குறைவுக்கு பாஜகவின் பழிவாங்கும் அரசியல்தான் காரணம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தக்கூறுமாறும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்ததாக தேஜஸ்வி மேலும் குறிப்பிட்டார்.


Next Story