இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்

திருவாரூர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர சிறப்புக்குழு கூட்டம் திருவாரூரில் நடந்தது. கூட்டத்துக்கு நகர துணைச் செயலாளர் தர்மதாஸ் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் மாரியப்பன் வரவேற்றார். திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திருவாரூரில் உள்ள மடப்புரம் ஆற்றுப்பாலத்தை அகலப்படுத்த வேண்டும். மாவட்ட மைய நூலகத்துக்கு சாலை வசதி அமைக்க கோரி போராட்டம் நடத்துவது, திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கும் ஷேர் ஆட்டோ இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 More update

Next Story