கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலரின்வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் அபேஸ்


கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலரின்வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 27 Oct 2023 6:45 PM GMT (Updated: 27 Oct 2023 6:46 PM GMT)

கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்


விழுப்புரம் குமாரவேல் நகர் பகுதியில் வசித்து வருபவர் மேகநாதன் (வயது 52). இவர் திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலையில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மேகநாதனுக்கு தெரியாமல் அவருடைய வங்கி கணக்கு விவரங்களை யாரோ மர்ம நபர் திருடி, அவர் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்துள்ளார்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

இதையறிந்ததும் அதிர்ச்சியடைந்த மேகநாதன், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story