இரு தரப்பினரிடையே தகராறு; 8 பேர் மீது வழக்கு


இரு தரப்பினரிடையே தகராறு; 8 பேர் மீது வழக்கு
x

கள்ளக்குறிச்சி அருகே இரு தரப்பினரிடையே நடந்த தகராறில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே ரோடு மாமானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி தனக்கோடி (வயது 45). இவர் தான் கிரையம் பெற்ற இடத்தை அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த தனசேகர் மற்றும் இவரது மகன்கள் ராஜ்குமார், சூர்யா, மகள் சரசு, மனைவி அபிராமி ஆகியோர் இந்த இடத்தை நீங்கள் அனுபவிக்க கூடாது என்று கூறி தனக்கோடி மற்றும் அவரது குடும்பத்தினர்களை அசிங்கமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தனக்கோடி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் தனசேகர், ராஜ்குமார், சூர்யா, சரசு, அபிராமி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் தனசேகர் மனைவி அபிராமி கொடுத்த புகாரின் பேரில் செல்வராஜ் மனைவி தனக்கோடி, அருள், ஆகாஷ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story