சென்னையில் 48 மணி நேரத்துக்கு பிறகு மழை சற்று ஓய்ந்தது..!


சென்னையில் 48 மணி நேரத்துக்கு பிறகு மழை சற்று ஓய்ந்தது..!
x

கோப்புப்படம்

ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் மிக்ஜம் புயல், சென்னைக்கு 120 கி.மீ. தூரம் தள்ளி சென்றது.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, வேளச்சேரி, பரங்கிமலை, எழும்பூர், மாம்பலம், மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணாநகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், அரும்பாக்கம், தாம்பரம், நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் 48 மணி நேரத்துக்கு பிறகு மழை சற்று ஓய்ந்துள்ளது. சென்னைக்கு 90 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த மிக்ஜம் புயல் தற்போது தள்ளி சென்றது. ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் மிக்ஜம் புயல், சென்னைக்கு 120 கி.மீ. தூரம் தள்ளி சென்றது.

இந்த நிலையில் இதன் காரணமாக இரவு 12 மணிக்குப் பிறகு படிப்படியாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.Next Story