வெட்டுக்காயத்துடன் கிடந்த ஓட்டல் தொழிலாளி உயிருடன் மீட்பு


வெட்டுக்காயத்துடன் கிடந்த ஓட்டல் தொழிலாளி உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 24 Sep 2022 6:45 PM GMT (Updated: 24 Sep 2022 6:46 PM GMT)

மண்டபத்தில் வெட்டுக்காயத்துடன் கிடந்த ஓட்டல் தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டார். அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வாலாந்தரவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 60). இவர் மண்டபத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். அதன் பின்னர் கால்நடைகளை பராமரித்து வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு ஓட்டலில் வேலை முடிந்த மகாலிங்கம் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர், மகாலிங்கம் சொந்த ஊருக்கு சென்று விட்டாரா? என்று விசாரித்த போதும் அங்கு வரவில்லை என தகவல் கிடைத்ததால் அவரது குடும்பத்தினர் அவரை தேடினர். இந்த நிலையில் மண்டபத்தில் தனியாருக்கு சொந்தமான மீன் கம்பெனி அருகே கழுத்து, கை, நெஞ்சு பகுதியில் வெட்டு காயத்துடன் மகாலிங்கம் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். உடனே அவரை போலீசார் த.மு.மு.க. ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மண்டபம் போலீஸ் நிலையத்தில் ராஜேஷ் கண்ணா கொடுத்த புகாரின் பேரில், ஓட்டல் தொழிலாளியை வெட்டியவர்களை தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story