தி.மு.க.வுடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து- செல்வப்பெருந்தகை


தி.மு.க.வுடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து- செல்வப்பெருந்தகை
x
தினத்தந்தி 1 March 2024 1:30 PM GMT (Updated: 1 March 2024 1:54 PM GMT)

தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்கிறது , எந்தப் பிரச்சினையும் கிடையாது வெகு விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

சென்னை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் ஒரு முன்மாதிரியான மாநிலமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் தொடர்பான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், 2-வது கட்டம், 3-வது கட்டம் எல்லாம் கிடையாது. காங்கிரஸ் - திமுக கூட்டணி மிக வலிமையாக இருக்கின்ற ஒரு கூட்டணி. 4 தேர்தல்களில் வெற்றி கூட்டணியாக இருந்திருக்கிறோம். அதேபோன்று இந்தத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடவிருக்கிறோம். பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்கிறது. எந்தப் பிரச்சினையும் கிடையாது. வெகு விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story