சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டமைப்பினர் மறியல் போராட்டம்


சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டமைப்பினர் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2023 7:30 PM GMT (Updated: 26 Oct 2023 7:30 PM GMT)

கிருஷ்ணகிரியில் சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஜெயந்தி தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் மதியழகன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் பெர்னாட் ஆகியோர் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் சந்தராச்சாரி, வெண்ணிலா, வெங்கடரத்தினம், மணி குணவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் மஞ்சுளா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் 102 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story