விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு


விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு
x

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருவாடானையில் நடைபெற்றது. விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் தம்பிராசு தலைமை தாங்கினார். ஒருங்கிணைப் பாளர் கவாஸ்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருவாடானை வட்டாரத்தை சேர்ந்த அஞ்சு கோட்டை, சிறுகம்பையூர், எட்டுகுடி, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தைச் சேர்ந்த திருத்தேர்வளை ஆகிய கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடந்த 2020-21-ம் ஆண்டிற்கு அரசு அறிவித்த கடன் தள்ளுபடியை தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட கூட்டுறவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த விவசாயிகளுக்கு நடப்பாண்டுக்கான பயிர் கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி அன்று திருவாடானையில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காத்திருப்பு கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கூட்டத்தில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story