பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு கோரி ராஜேஷ் தாஸ் மனு - ஐகோர்ட்டு நிராகரிப்பு


பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு கோரி ராஜேஷ் தாஸ் மனு - ஐகோர்ட்டு நிராகரிப்பு
x

தையூர் பங்களாவுக்கு மீண்டும் மின் இணைப்பு கோரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் தையூர் பங்களாவில் மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்து முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேசஷ் தாஸ், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ் தாஸ் தரப்பில், வீட்டுக்கடனை முறையாக செலுத்தி வருவதால் மீண்டும் மின் இணைப்பை வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து பீலா வெங்கடேசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வீட்டின் மீது ராஜேஷ் தாசுக்கு எந்த உரிமையும் இல்லாத நிலையில், மின் இணைப்பை மீண்டும் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுக்க முடியாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, ராஜேஷ் தாசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story