நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

திருப்பத்தூர் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே செவ்வாத்தூர் சாலூர் பகுதியில் 2 ஏக்கர் 21 சென்ட் குளம் உள்ளது. இதை அதே ஊரைச் சேர்ந்த தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் அதே ஊரைச் சேர்ந்த மணி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அதன்பேரில் ஆக்கிரமிப்பை தாசில்தார் தலைமையில் அகற்ற வேண்டும் என கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி முன்னிலையில், தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் வருவாய்த்துறையினர் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றினர்.

இதனால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story