இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 26 Oct 2023 7:30 PM GMT (Updated: 26 Oct 2023 7:30 PM GMT)

தளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள சொல்ளேபுரம் கிராமத்தில் வசிப்பவர் அந்தோணிசாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மகள் மார்த்தா ராணி (28) என்பவரை அதே ஊரை சேர்ந்த மதலைமுத்து என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுககு பாலஅருண் (10) என்ற மகனும், அர்ச்சனா (6) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மார்த்தா ராணி நேற்று முனதினம இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story