மழை வெள்ள பாதிப்புகள், மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலர்


மழை வெள்ள பாதிப்புகள், மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலர்
x
தினத்தந்தி 4 Dec 2023 8:45 PM GMT (Updated: 4 Dec 2023 9:42 PM GMT)

இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது.

சென்னை,

சென்னையை மிக்ஜம் புயல் அடித்து துவம்சம் செய்து இருக்கிறது. இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. இடைவிடாது பெய்த மழையால் சென்னையே தத்தளித்தது.

மாநகரில் நேற்று மழை தொய்வின்றி பெய்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது என்றே கூறலாம்.

இந்த சூழலில் சென்னையில் இருந்து 130 கி.மீ. வடக்கு திசையில் விலகி மிக்ஜம் புயல் சென்றுள்ளது என்றும் ஆந்திராவின் பாபட்லா அருகே இன்று காலை 5 மணி அளவில் மிக்ஜம் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில், மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகளை ஆய்வு தலைமைச் செயலர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் மேற்கொண்டனர்.


Next Story