ஜல்லிகள் பெயர்ந்து சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்


ஜல்லிகள் பெயர்ந்து சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:48 PM GMT)

இருதயபுரத்தில் ஜல்லிகள் பெயர்ந்து சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

இருதயபுரத்தில் ஜல்லிகள் பெயர்ந்து சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமான சாலை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது இருதயபுரம். இப்பகுதியில் இருந்து அள்ளிக்கொண்டாப்பட்டு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை முற்றிலும் சேதமான நிலையில் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.

மேலும் இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக போடப்பட்டது. ஆனால் சாலை போடப்பட்டு அதனை சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பராமரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தார் சாலை நாளுக்கு நாள் சேதம் ஏற்பட்டு ஜல்லிகள் பெயர்ந்து சாலையின் மையப்பகுதியில் குவிந்து கிடக்கிறது.

புதிய சாலை அமைக்க வேண்டும்

இந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் விவசாய நிலங்களில் பயிரிடப்படும் கரும்பு, தானியங்கள் உள்ளிட்டவைகளை அறுவடை செய்து விவசாயிகள் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல பயன்படுத்துகின்றனர்.

சாலை முழுவதும் ஜல்லிகள் குவிந்து கிடப்பதால் கடும் சிரமத்துடன் அன்றாடம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர்.

மேலும் இருசக்கர வாகனங்கள் அவ்வப்போது பஞ்சராகி விடுவதால் கடும் சிரமத்தை அன்றாடம் சந்தித்து வருவதாக வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமான சாலையை நேரடியாக ஆய்வு செய்து புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story