வேறு ஒருவருடன் பழகியதை கண்டித்ததால் பெண் மாயம்


வேறு ஒருவருடன் பழகியதை கண்டித்ததால் பெண் மாயம்
x

வேறு ஒருவருடன் பழகியதை கணவர் கண்டித்ததால் பெண் மாயமானார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த பெரிய மோட்டூர் முத்துமாரியம்மன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் அனுமந்தராயன் (வயது 36), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஆனந்தி (27). இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

ஆனந்தி வேறு ஒருவருடன் பழகியதாகவும், அதனை அனுமந்தராயன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த மே மாதம் 7-ந் தேதி ஆனந்தி மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து அனுமந்தராயன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார். அதில் சீனிவாசன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருக்கிறார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story