தாமிர கம்பி திருடிய வாலிபர் பிடிபட்டார்


தாமிர கம்பி திருடிய வாலிபர் பிடிபட்டார்
x

திருக்கோவிலூரில் தாமிர கம்பி திருடிய வாலிபர் பிடிபட்டார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள ஆவிகொளப்பாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னராசு (வயது 29). சம்பவத்தன்று இவரும், அதே பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரும் பெருமாள் நாயக்கர் வீதியை சேர்ந்த விக்ரம்(30) என்பவருக்கு சொந்தமான இடத்தில் தாமிரகம்பியை திருடிக்கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு வந்த போது, இருவரும் தப்பிக்க முயன்றனர். அப்போது பொதுமக்கள் சின்னராசுவை மட்டும் விரட்டிப்பிடித்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னராசுவை கைது செய்து, ஒரு மொபட் மற்றும் 5 கிலோ தாமிரகம்பியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சக்கரவர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story