இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 3 March 2024 1:06 AM GMT (Updated: 3 March 2024 4:19 AM GMT)

ராமேஷ்வரம் ராமநாத சுவாமி பவனி.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது ஆண்டு, மாசி 20(ஞாயிற்றுக்கிழமை)

திதி: அஷ்டமி இரவு 3.37 மணி வரை பிறகு நவமி

நட்சத்திரம்: அனுஷம் காலை 11.19 மணி வரை பிறகு கேட்டை

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை

எமகண்டம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

ராமேஷ்வரம் ராமநாத சுவாமி பவனி. ராமேஷ்வரம் சுவாமி, வெள்ளி கற்பகவிருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி. காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் திருமஞ்சன சேவை. கோவை கோனியம்மன் தீர்த்தம், யாளி வாகனத்தில் பவனி, திருவாரூர் தியாகராஜர் வீதி உலா.

இன்றைய ராசிபலன்:

மேஷம்

யோசித்து செயல்பட வேண்டியநாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வருவதில் தாமதப்படும். உடல்நிலையில் சோர்வு ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

ரிஷபம்

சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள், நண்பர்களின் மூலம் பணத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

மிதுனம்

சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும் நாள். தனவரவு உண்டு. தக்க விதத்தில் நண்பர்கள் உதவி செய்வர், தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். கடன்சுமை குறையும்.

கடகம்

காரிய வெற்றி ஏற்படும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புகழ் கூடும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடரும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

சிம்மம்

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும்.

கன்னி

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தேங்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவீர்கள்.

துலாம்

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடுகட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

விருச்சிகம்

சந்தோஷ வாய்ப்புகளை சந்தித்து மகிழும் நாள். தனவரவு திருப்திதரும். தொழில் ரீதியாகச் சில முக்கிய முடிவெடுப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். நட்பால் நன்மையுண்டு.

தனுசு

கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்ய முன் வருவீர்கள். நண்பர்கள் நல்ல தக வலைத் தருவர். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

மகரம்

நல்ல காரியம் நடைபெறும் நாள். நாகரீகப் பொருட்களை வாங்கி | மகிழ்வீர்கள். இடம் வாங்குவதில் இருந்த தடுமாற்றங்கள் அகலும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.

கும்பம்

வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தொலைபேசி வழித்தகவல் உற்சாகம் தரும்.

மீனம்

ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். வியாபார விருத்தி உண்டு. திருமண வாய்ப்புகள் தேடிவரும். நண்பர்கள் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

சந்திராஷ்டமம்: மேஷம்


Next Story