இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 3 April 2024 1:46 AM GMT (Updated: 3 April 2024 3:27 AM GMT)

மீன ராசிக்காரர்களுக்கு தொழில் வளம் மேலோங்கும் நாள்.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 21-ந்தேதி புதன்கிழமை.

திதி: நவமி திதி பகல்(1.56)க்கு மேல் தசமி திதி.

நட்சத்திரம்: உத்ராடம் நட்சத்திரம் மாலை (5.30)க்கு மேல் திருவோணம் நட்சத்திரம்.

யோகம்: அமிர்தயோகம் மாலை(5.30)க்கு மேல் சித்தயோகம். மேல்நோக்குநாள்.

சூலம்: வடக்கு

ராகுகாலம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

ஒழுகைமங்கலம் ஸ்ரீ மாரியம்மன் வெள்ளி காமதேனு வாகன பவனி. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. இன்று திருவோண விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கரிவலம் வந்த நல்லூர் ஸ்ரீ பால் வண்ணநாதர் விழா தொடக்கம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி ரிஷிமுக பர்வதம் பட்டாபிராமர் திருக்கோலமாய்க் காட்சி. தாயமங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் பூத வாகனத்தில் திருவீதிஉலா. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம் பெருமான் சிறப்பு திருமஞ்சன சேவை.

இன்றைய தினப்பலன்:

மேஷம்: திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெற வழிபிறக்கும். உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரலாம்.

ரிஷபம்: கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். வருமானம் உயரும். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை தீரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

மிதுனம்: எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். இடையூறு சக்திகள் வந்து சேரும். தொழில் பங்குதாரர்கள் தொல்லை தருவர். பணம் வந்த நிமிடமே செலவாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

கடகம்: பொருளாதார நெருக்கடி அகலும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்று முடிவாகும். அரசியல் பிரமுகர்களின் ஆதரவு உண்டு. சொத்துகள் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.

சிம்மம்: முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். விடியும் பொழுதே வெற்றிச் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் இருப்பவரை அனுசரித்துச் செல்வது நல்லது. வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.

கன்னி: மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. அருகில் உள்ளவர்கள் உதவி செய்ய மறுப்பர். பழைய கடனை அடைக்கப் புதிய கடன் வாங்கும் அமைப்பு உண்டு.

துலாம்: முயற்சி கைகூடும் நாள். முன்னேற்றம் கூடும். தனவரவு திருப்தி தரும். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வது நல்லது. பஞ்சாயத்துகள் சாதகமாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

விருச்சிகம்: பெருமைகள் வந்து சேரும் நாள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். பிரபலங்களை பயணத்தின்போது சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.

தனுசு: புதிய பாதை புலப்படும் நாள். விருப்பங்கள் நிறைவேறும். உங்களுக்கு எதிராக போர்க்கொடி காட்டியவர்கள் இப்பொழுது மனம் மாறுவர். குடும்பத்தினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள்.

மகரம்: யோகமான நாள். புது முயற்சிகள் வெற்றி தரும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். குழந்தைகளின் சுபகாரிய பேச்சுகள் கைகூடும்.

கும்பம்: குழப்பங்கள் தீரும் நாள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் புது முயற்சி கைகூடும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உங்கள் கருத்தை எதிர்த்தவர்கள் இப்போது ஏற்றுக் கொள்வார்கள்.

மீனம்: நட்பால் நன்மை கிட்டும் நாள். பணம் வரும் பாதையைச் சீராக்கிக் கொள்வீர்கள். வீண் குற்றச்சாட்டுகள் அகலும். சுபச்செய்திகள் வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

சந்திராஷ்டமம்: மிதுனம்.


Next Story