3வது டி20: கில் அரைசதம்... இந்திய அணி 182 ரன்கள் குவிப்பு


3வது டி20: கில் அரைசதம்... இந்திய அணி 182 ரன்கள் குவிப்பு
x

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெறுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , கில் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். தொடக்க விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வால் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.தொடர்ந்து அபிஷேக் ஷர்மா 10 ரன்களுக்கு வெளியேறினார். மறுபுறம் கில் அரைசதம் அடித்து அசத்தினர் .

தொடர்ந்து கில் - ருதுராஜ் இணைந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர்.கில் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட் 49 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது . தொடர்ந்து 183 ரன்கள் இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாடுகிறது.


Next Story