எம்.எஸ். தோனி கூறிய அட்வைஸ்தான் எனக்கு பெரிதும் உதவுகிறது -தீக்ஷனா


எம்.எஸ். தோனி கூறிய அட்வைஸ்தான் எனக்கு பெரிதும் உதவுகிறது -தீக்ஷனா
x

image courtesy: PTI

தினத்தந்தி 27 July 2024 3:28 AM GMT (Updated: 27 July 2024 4:14 AM GMT)

பேட்ஸ்மேன்கள் தம்மை ஸ்வீப் ஷாட்டுகளால் அதிரடியாக அடித்ததாக தீக்ஷனா கூறியுள்ளார்.

பல்லகெலே,

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.

இந்தத் தொடரில் இந்தியாவுக்கு மதிஷா பதிரனா மற்றும் தீக்ஷனா ஆகியோர் மிகப்பெரிய சவாலை கொடுப்பார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் கடந்த சில வருடங்களாக எம்.எஸ். தோனி தலைமையில் ஐபிஎல் தொடரில் விளையாடி நிறைய அனுபவம் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பேட்ஸ்மேன்கள் தம்மை ஸ்வீப் ஷாட்டுகளால் அதிரடியாக அடித்ததாக தீக்ஷனா கூறியுள்ளார். இருப்பினும் அதைத் தடுத்து வெற்றிகரமாக பந்து வீசும் யுக்தியை தோனி தமக்கு கற்றுக் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "எம்.எஸ். தோனியிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுள்ளேன். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் எனக்கு எதிராக ஸ்வீப் ஷாட்டுகளை அடிக்கும்போது எப்படி பந்து வீச வேண்டும் என்று அவர் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார். என்னுடைய பவுலிங் ஆக்சன் காரணமாக இயற்கையாகவே நான் கொஞ்சம் வேகமாக வீசுவேன். அப்படி இருந்தும் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து பவுண்டரிகள் அடித்தனர்.

அப்போது தோனி என்னை கொஞ்சம் புல்லராக வீச சொன்னார். அது என்னுடைய யார்க்கரை முன்னேற்றுவதற்கும் உதவியது. அதே போல டெத் ஓவர்களில் பந்து வீசுவதற்கும் என்னுடைய தன்னம்பிக்கையை அதிகரித்தது. தோனி எப்போதும் திட்டத்தை வைத்திருப்பார். ஆனால் முதலில் அவர் பவுலர்களின் திட்டத்தைதான் பின்பற்றுவார். அது வேலையாகவில்லை என்றால்தான் தோனி உங்களை வழிநடத்துவார்" என்று கூறினார்.


Next Story