பஞ்சாப் அணி அபார பந்துவீச்சு... 145 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்


பஞ்சாப் அணி அபார பந்துவீச்சு... 145 ரன்களை இலக்காக நிர்ணயித்தது  ராஜஸ்தான்
x

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் 144ரன்கள் எடுத்தது

கவுகாத்தி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) கவுகாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி , ராஜஸ்தான் அணிமுதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , டாம் கோலர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும் , டாம் கோலர் 18 ரன்களிலும் , பின்னர் வந்த சாம்சன் 18 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.தொடர்ந்து ரியான் பராக் , அஸ்வின் இருவரும் சிறப்பாக ஆடினர். நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். அஸ்வின் 19 பந்துகளில் 28 ரன்களும் , பராக் 34 பந்துகளில் 48 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் 144ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கரன் , ராகுல் சாஹர் ,ஹர்சல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தொடர்ந்து 145 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடுகிறது.


Next Story