யூரோ கோப்பை தோல்வி எதிரொலி: இங்கிலாந்தின் மேலாளர் பதவியில் இருந்து கரேத் சவுத்கேட் விலகல்


யூரோ கோப்பை தோல்வி எதிரொலி: இங்கிலாந்தின் மேலாளர் பதவியில் இருந்து கரேத் சவுத்கேட் விலகல்
x

Image Courtesy: @England

யூரோ கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

லண்டன்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் கடந்த ஒரு மாதம் நடந்தது. இதில் தலைநகர் பெர்லினில் உள்ள ஒலிம்பியா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது.

பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் யூரோ கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததை அடுத்து அந்த அணியின் மேலாளர் கரேத் சவுத்கேட் அப்பதவியில் இருந்து விலகி உள்ளார்.

இது தொடர்பாக இங்கிலாந்து கால்பந்து நிர்வாகம் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 102 ஆட்டங்கள் மற்றும் ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்தின் மேலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கரேத் சவுத்கேட் அறிவித்தார் என தெரிவித்துள்ளது.


Next Story