ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆக்கி தொடர்: 2-வது ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி தோல்வி


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆக்கி தொடர்: 2-வது ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி தோல்வி
x

இந்த தொடரில் இரண்டு வெற்றிகளைப் பெற்று ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

அடிலெய்டு,

ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஆட்டம் அடிலெய்டில் நேற்று நடந்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வி கண்டது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் தாதும் ஸ்டீவர்ட் 12-வது, 45-வது நிமிடங்களிலும், பிப்பா மோர்கன் 38-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணியில் சங்கிதா குமாரி 13-வது நிமிடத்திலும், குர்ஜித் கவுர் 17-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஆட்டம் இதே மைதானத்தில் இன்று நடக்கிறது.


Next Story