விளையாட்டு விழா


விளையாட்டு விழா
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது

தென்காசி

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் 7-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் மோனிகா டி சோசா, பள்ளியின் அலுவலக இயக்குனர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் தொடர் ஓட்டம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் தனராஜ் பிள்ளை கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அவர் பேசும்போது, மாணவர்கள் விளையாட்டு விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் மாணவர்களுக்கு வருங்காலத்தில் ஒழுக்கமாக நடந்து கொள்ள விளையாட்டு எந்த வகையில் உதவும் என்றும் கூறினார். நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் பாலமுருகன், ஸ்டீபன், ரவி அருண், சோபியா, வைஷ்ணவி, மஹா ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story