தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி - பி.வி.சிந்து தோல்வி


தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி - பி.வி.சிந்து தோல்வி
x

கனடாவின் மிட்செலி உடனான ஆட்டத்தில் பி.வி.சிந்து தோல்வியை தழுவினார்.

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவருமான இந்தியாவின் பி.வி.சிந்து முதல் தடையை கடக்க முடியாமல் பணிந்தார்.

அவர் 8-21, 21-18, 18-21 என்ற செட் கணக்கில் கனடாவின் மிட்செலியிடம் தோல்வியை தழுவினார். இந்த ஆட்டம் 62 நிமிடங்கள் நீடித்தது. 12-வது முறையாக மிட்செலியிடம் மோதிய சிந்து அதில் சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இந்த ஆண்டில் இன்னும் எந்த பட்டமும் வெல்லாத சிந்துவின் சோகம் தொடருகிறது.


Next Story