கொரியா ஓபன் டென்னிஸ்: ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா 'சாம்பியன்'


கொரியா ஓபன் டென்னிஸ்: ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா சாம்பியன்
x

கொரியா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா வெற்றி பெற்று ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.

சியோல்,

கொரியா ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வந்தது.

இதில் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 24-வது இடம் வகிக்கும் ரஷியாவின் எகதேரினா அலெக்சாண்ட்ரோவா 7-6 (7-4), 6-0 என்ற நேர் செட்டில் முன்னாள் சாம்பியன் ஜெலினா ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) தோற்கடித்து பட்டத்தை வசப்படுத்தினார்.

தனது 3-வது சர்வதேச பட்டத்தை கையில் ஏந்திய 27 வயதான அலெக்சாண்ட்ரோவாவுக்கு ரூ.27 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.


Next Story