பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; .கார்லஸ் அல்காரஸ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; .கார்லஸ் அல்காரஸ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

Image Courtesy: AFP

இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது.

பாரீஸ்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ் அமெரிக்காவின் ஜே.ஜே. வோல்ப் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்லஸ் அல்காரஸ் 6-1, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஜே.ஜே. வோல்பை 2வது சுற்றுக்கு முன்னேறினார்.


Next Story